×

கர்நாடகா தேர்தல் பரப்புரையின்போது, ‘பாம்பு’என ஒப்பிட்டது பாஜகவையே தவிர, பிரதமர் மோடியை அல்ல : மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி : பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் மோடி சார்ந்த சித்தாந்தம் குறித்தே தாம் பேசியதாக மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக தேர்தல் களத்தில் நேற்று கதக் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவின் சித்தாந்தமானது நாட்டை சர்வ நாசம் செய்யும் சித்தாந்தம் என கூறினார். அத்துடன் பிரதமர் மோடி பாம்புடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், தாம் மோடியை குறித்து பேசவில்லை என்றும் அவர் சார்ந்த சித்தாந்ததை குறித்தே பேசியதாகவும் விளக்கம் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, தமது பேச்சுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.

மல்லிகார்ஜுனா கார்கே மேலும் கூறியதாவது, “”கர்நாடகா தேர்தல் பரப்புரையின்போது, ‘பாம்பு’ என ஒப்பிட்டது பாஜகவையே தவிர, பிரதமர் மோடியை அல்ல; பிரதமர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை; பாஜக அரசை கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகின்றனர், அதை சுட்டிக்காட்டியே நான் பேசினேன்””, என்றார். கடந்த 25ம் தேதி விஜயநகரில் பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வராக சித்தராமையா இருந்த போது, பாப்புலஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். பொய்யான தகவல்களை பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர்கள், காவல் நிலையத்தில் அமித்ஷாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

The post கர்நாடகா தேர்தல் பரப்புரையின்போது, ‘பாம்பு’ என ஒப்பிட்டது பாஜகவையே தவிர, பிரதமர் மோடியை அல்ல : மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : Karnataka election ,Bajagai ,Modi ,Mallikarjuna Karke ,Delhi ,Congress National Leader ,Malligarjuna Karge ,Bajavai ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...